இராமநாதபுரம்

புதிய ரேஷன் கார்டு வாங்க 3000/- ரூபாய் லஞ்சம் கேட்ட நபர் சிக்கினார்..

புதிய ரேஷன் கார்டு வாங்க 3000/- ரூபாய் லஞ்சம் கேட்ட நபர் சிக்கினார்..

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியைச் சேர்ந்த புகார் தாரர் ஒருவர் தனது மனைவி பெயரில் ரேஷன் கார்டு வேண்டி கடந்த மார்ச் மாதம் இ. சேவை மூலம் விண்ணப்பம் செய்துள்ளார் பின்பு ரேஷன் கார்டு சம்பந்தமாக விவரம் கேட்க கடலாடி தாலுகா அலுவலகம் சென்று விசாரித்த போது இரண்டு மாதம் கழித்து உங்க ரேஷன் கடையில் போய் பாருங்க விவரம் சொல்லுவாங்க எனக் கூறப்பட்டுள்ளது… இந்நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு புகார்தாரர் மூக்கையூர் ரேஷன் கடை பொறுப்பாளர் முத்துலட்சுமி (வயது 49) என்பவரை சந்தித்து தனக்கு புது ரேஷன் கார்டு வந்திருச்சா என கேட்டுள்ளார் அதற்கு அவர் உங்களுக்கு ரேஷன் கார்டு வந்துருச்சு 3500/- கொடுத்து விட்டு வாங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ளார்… அதற்குப் புகார்தாரர் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை எனக் கூறியதற்கு மூக்கையூர் ரேஷன் கடை பொறுப்பாளர் முத்துலட்சுமி 3500/- கொடுத்தால் தான் ரேஷன் கார்டு கிடைக்கும் என கரராக கூறியுள்ளார் இந்நிலையில் புகார்தாரரின் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் அரசு காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற ரேஷன் கார்டு தேவைப்பட்டதால் மூக்கையூர் ரேஷன் கடை பொறுப்பாளர் முத்துலட்சுமியை நேற்று மீண்டும் தனது அலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் தனக்கு கொடுக்க வேண்டிய பணம் 500/- ரூபாய் குறைத்துவிட்டு மேல் அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டிய பணம் 3000/- தை சாயங்காலத்திற்குள் ரேஷன் கடை தற்காலிக பணியாளிடம் கொடுத்திரு எனவும் உங்க ரேஷன் கார்டை நான் அவரிடம் கொடுத்து விடுகின்றேன் நீங்க அவரிடம் வாங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.. எனவே லஞ்சம் கொடுக்க விரும்பாத மனுதாரர் ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய பணம் 3000/- ஆயிரத்தை தற்காலிக பணியாளரிடம் கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து விசாரித்ததில் மேற்படி பொறுப்பாளர் முத்துலட்சுமி கூறி தான் வாங்கியுள்ளது தெரியவந்துள்ளதால் முத்துலட்சுமியை இன்று காலை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button