இளம்பெண் எரித்துக் கொலை: இன்ஸ்டா மூலம் பழகிய வாலிபர் கைது
இளம்பெண் எரித்துக் கொலை: இன்ஸ்டா மூலம் பழகிய வாலிபர் கைது
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான வாலிபர், இளம்பெண்ணை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடந்தது என்ன?
இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்த நவீன் என்பவர், ஈரோடு பாரதி நகரைச் சேர்ந்த வினோதினி என்ற இளம்பெண்ணை இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று வினோதினி வீட்டிற்கு சென்ற நவீன், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துள்ளார்.
இதில் படுகாயமடைந்த வினோதினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலை செய்த நவீனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொடூர சம்பவம் இராமநாதபுரம் மற்றும் ஈரோடு பகுதிகளில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.




