இராமநாதபுரம்
பாராட்டு

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய திறன் வாரத்தை முன்னிட்டு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி, பாராட்டினார். உடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மதுக்குமார் உள்ளார்.




