இராமநாதபுரம்

கமுதி பசும்பொன்னில் டிஎன்டி மறவர் நூற்றாண்டு மாநாடு

கமுதி பசும்பொன்னில் டிஎன்டி மறவர் நூற்றாண்டு மாநாடு

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் டிஎன்டி மறவர் நூற்றாண்டு மாநாடு வரும் ஆகஸ்ட் 16-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி:
இதனை முன்னிட்டு மாநாட்டிற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று பசும்பொன் தேவர் கல்லூரி அருகே நடைபெற்றது.

நாடு மறவர் சங்க நிர்வாகிகள், விழா ஏற்பாட்டாளர்கள், சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மாநாட்டு ஏற்பாடுகள்:
மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், முகூர்த கால் நடும் நிகழ்சி சிறப்பாக நடைபெற்றது.

இந்த மாநாட்டிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநாட்டில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் மு. தூரி இருப்பு இராமேஸ்வரம் முனியசாமித்தேவர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button