சுதந்திர தினத்தை முன்னிட்டு பாம்பன் புதிய ரயில் பாலத்தில் தீவிர பாதுகாப்புரயில்வே போலீசார் வெடிகுண்டு சோதனை + ரோந்து

சுதந்திர தினத்தை முன்னிட்டு பாம்பன் புதிய ரயில் பாலத்தில் தீவிர பாதுகாப்பு
ரயில்வே போலீசார் வெடிகுண்டு சோதனை + ரோந்து

இராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே – பாம்பன் புதிய செங்குத்து தூக்கு ரயில் பாலம்
ஆகஸ்ட் 15 இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு பணிகள் ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் புதிய ரயில் செங்குத்து தூக்கு பாலத்தில் துப்பாக்கி ஏந்திய ரயில்வே போலீசார் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாலத்தின் முன்பகுதி, பக்கவாட்டு சுவர் ஆகியவற்றில் வெடிகுண்டு சோதனை கருவி மூலம் தீவிர ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. போலீசார் ரயில் தண்டவாளங்களில் நடந்து சென்று பாலத்தை ஆய்வு செய்தனர்.
பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்:
சுதந்திர தின பாதுகாப்பு காரணமாக, பாம்பன் புதிய தூக்கு பாலத்தில் மீனவர்கள் யாரும் அமர்ந்து தூண்டில் வைத்து மீன் பிடிக்க வேண்டாம் என ரயில்வே போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
டெல்லி செங்கோட்டை:
நாளை டெல்லி செங்கோட்டையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றி மரியாதை செலுத்த உள்ளார். நாடு முழுவதும் சுதந்திர தின விழாக்கள் கொண்டாடப்பட உள்ள நிலையில், முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.



