இராமநாதபுரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்களின் சங்கமம் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்களின் சங்கமம் நிகழ்ச்சி

இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்களின் சங்கமம் நிகழ்ச்சி தனியார் திருமண மஹாலில் மாவட்ட தலைவர் இப்ராஹிம் சாபிர் தலைமையில் நடைபெற்றது, இதில் மாவட்ட செயலாளர் சத்தார்அலி, மாவட்ட பொருளாளர் கரீம் ஹக் சாஹிப், மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரஃபாத், மாவட்ட துணைச்செயலாளர்கள் தினாஜ்கான்,பாரூக்,உஸ்மான்,மீரான்,
நசுருதீன் மருத்துவணி செயலாளர் ஹாஜா சம்சுதீன்,தொண்டரணி செயலாளர் அல்சபூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில துணை பொதுச்செயலாளர் அப்துர்ரஹீம் “முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள்” என்ற தலைப்பில் மாநில துணைத்தலைவர் தாவூத் கைஸர் “இஸ்லாமும் இன்றைய இளைஞர்களும்” என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள்.மாவட்ட செயலாளர் சத்தார்அலி அவர்கள் நன்றியுரையாற்றினார் 300 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டனர் இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

முஸ்லிம்கள் இனி மராத்தியில் தொழுகைக்கான பாங்கு சொல்ல வேண்டுமென மஹாராஷ்டிரா மாநில பாஜக அமைச்சரான நிதீஷ் ரானே மீண்டும் வெறுப்பு பேச்சை பேசியுள்ளார். ஒருக்குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிராக தொடர்ந்து பேசி வரும் நிதிஷ் ரானேவை நீதிமன்றம் தலையிட்டு தண்டிக்க வேண்டும் என இந்த கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொண்டனர்,

இஸ்லாமியர்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் எனும் கோரிக்கையை பன்னெடுங்காலமாக இஸ்லாமியரகள் வைத்து வருகின்றனர், சென்ற தேர்தல் அறிக்கையிலும் , பிரச்சாரத்தின் போது முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் அதிகரித்து தருவதாக வாக்குறுதி கொடுத்தார், தான் சொன்ன வாக்கை காக்கும் வகையில் இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்தி அரசாணை பிறப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு முதல்வருக்கு இந்த கூட்டத்தின் வாயிலாகவும் கேட்டுக்கொண்டனர்,

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button