இராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சார்பில் கஞ்சா வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட கார்கள், டூவீலர்கள் ஆக.,7 ல் பொது ஏலத்தில் விடப்படவுள்ளன.

ராமநாதபுரம் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சார்பில் கஞ்சா வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட கார்கள், டூவீலர்கள் ஆக.,7 ல் பொது ஏலத்தில் விடப்படவுள்ளன.

ராமநாதபுரம் ஆயுதப்படை வளாகத்தில் காலை 10:00 மணிக்கு ஏலம் நடைபெறும். நான்கு சக்கர வாகனங்கள் 5, மூன்று சக்கர வாகனங்கள் 2, டூவீலர்கள் 24 என 31 வாகனங்கள் ஏலத்தில் விடப்படும். ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவோர் ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்ளை ஆக.,6 க்குள் பார்வையிட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஒரு வாகனத்திற்கு ரூ.2000 முன்பதிவு பணம் செலுத்த வேண்டும். முன்பணம் செலுத்தாதவர்கள் கலந்து கொள்ள முடியாது. ஏலத்தில் எடுத்த வாகனங்களுக்கு ஜி.எஸ்.டி., வரி தனியாக வசூலிக்கப்படும் என மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button