இராமநாதபுரம்

கமுதி சத்திரிய நாடார் ஆண்கள் மேல்நிலைபள்ளியில் ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டம்’ தொடக்கம்

கமுதி சத்திரிய நாடார் ஆண்கள் மேல்நிலைபள்ளியில் ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டம்’ தொடக்கம்

ராமநாதபுரம்


ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள சத்திரிய நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கான விரிவுபடுத்தப்பட்டு தமிழக முதல்வர் விஜய் அவர்களால் சென்னையில் தொடங்கி வைக்கப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் கமுதியில் சிறப்பாகத் தொடங்கியது
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பள்ளியின் நிர்வாகக் குழுவினர் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலை வகித்து மாணவர்களுக்கு காலை உணவை பரிமாறி திட்டத்தை தொடக்கி வைத்தனர்.
மாணவர்கள் பசியின்றி கல்வி கற்க வேண்டும், அவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க வேண்டும் மற்றும் வருகைப்பதிவை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம் மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்கள், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவச் செல்வங்கள் பலர் கலந்து கொண்டனர். பள்ளியிலேயே சூடான, சத்தான உணவு வழங்கப்பட்டதால் மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button