செல்வநாயகபுரம் அரசு பள்ளியில் காலை உணவு திட்டம் விரிவாக்கம்

செல்வநாயகபுரம் அரசு பள்ளியில் காலை உணவு திட்டம் விரிவாக்கம்

முதுகுளத்தூர், செப்.22– முதுகுளத்தூர் அருகே உள்ள செல்வநாயகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை உணவு திட்ட விரிவாக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தொழில்துறை அமைச்சர் மதன்ராஜ் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து அமைச்சர் மதன்ராஜ், கலெக்டர் மற்றும் பள்ளி மாணவ, மாணவியருடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டனர்.
நிகழ்ச்சியில் முதுகுளத்தூர் தாசில்தார் கோகுல்நாத், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தேவபிரியதர்ஷினி, கி.ஊ. முருகானந்தவல்லி, தவெக மேற்கு மாவட்ட செயலாளர் மதன், முன்னாள் எம்.எல்.ஏ. மு.முருகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கலக்குறிச்சி எஸ்.டி.செந்தில்குமார், ஒன்றிய செயலாளர் குணா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தண்ணதாசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.




