இராமநாதபுரம்
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்

கீழக்கரை, செப்.22

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் சிறப்பான முறையில் தொடங்கி வைக்கப்பட்டது.
கீழக்கரை ஹமீதியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் நகர்மன்றத் தலைவர், நகராட்சி ஆணையர் மற்றும் பள்ளி தாளாளர் ஆகியோர் கலந்து கொண்டு, மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தனர்.




