உணவு திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நம்புதாளை தொடக்கப் பள்ளியில் உணவுத்திருவிழா திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.கருமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெஜினி, காங்கிரஸ் மீனவர் அணி மாநில செயலாளர் முத்து ராக்கு, தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டிச் செல்வி ஆறுமுகம், நம்புதாளை சிவன் கோவில் அறங்காவலர் வாசு ஜெயந்தன் உட்பட பலர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் வட்டார கல்வி அலுவலர் ஆரோக்கியசாமி வரவேற்றார். இப்பகுதி கடலோர கிராமமாக இருப்பதால் இரால் வடை, மீன் புட்டு, கவுனி அரிசி பாயாசம், தானிய லட்டு, முருங்கை கீரை பக்கோடா போன்ற 88 வகையான உணவுப் பொருட்களை மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் செய்திருந்த விதவிதமான உணவு பதார்த்தங்கள் செய்திருந்தனர். கலந்து கொண்டவர்கள் உணவுப் பொருட்களையும் காய்கனிகளில் செய்யப்பட்ட கலைப் பொருட்களையும் பார்வையிட்டனர்.





