இராமநாதபுரம்

செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி வரமா? சாபமா?ராமநாதபுரம் சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரியில் பட்டிமன்றம்!

செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி வரமா? சாபமா?
ராமநாதபுரம் சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரியில் பட்டிமன்றம்!

ராமநாதபுரம் சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரியில் தமிழ்த்துறை கம்பன் கழகம் சார்பில், “செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி வரமா? சாபமா?” என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் டாக்டர் தேவ. மனோகர மார்ட்டின் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் டாக்டர் ஆ. ஆனந்த் முன்னிலை வகித்தார்.

பட்டிமன்றத்திற்கு முதலாமாண்டு மாணவி ஆ. ஜனரஞ்சனி நடுவராக செயல்பட்டார்.
பட்டிமன்றத்தில் “வரமே” என்ற தலைப்பில் முதலாமாண்டு மாணவ ஆசிரியர்கள் அ. ஜாஸ்மின் பானு, ம. சங்கீதா, மு. ஹரிணி ஆகியோர் பேசினர். “சாபமே” என்ற தலைப்பில் பா. அனுசியா, செ. ரஹ்மத் அனுசியா, நா. நாகேஸ்வரி ஆகியோர் தங்களது கருத்துகளை முன்வைத்தனர்.

செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகள், அதன் வளர்ச்சியால் ஏற்படும் நன்மைகள் மற்றும் சவால்கள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பட்டிமன்றம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கம்பன் கழக ஒருங்கிணைப்பாளரும் உதவிப்பேராசிரியருமான க. வினோத்குமார் செய்திருந்தார். கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button