இராமநாதபுரம்
எஸ் டி பி ஐ கட்சி சார்பில் தெரு நாய்களை கருணை கொலை செய்ய மனு

எஸ் டி பி ஐ கட்சி சார்பில் தெரு நாய்களை கருணை கொலை செய்ய மனு

தெரு நாய்களை கருணை கொலை செய்ய வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி மனு கொடுத்தது. எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் பாம்பன் ஊராட்சி செயலாளரிடம், நோய்வாய்ப்பட்டு தெருக்களில் சுற்றித் திரியும் தெரு நாய்களை கருணை கொலை செய்ய வேண்டும் என்று மனு கொடுத்தனர். இந்நிகழ்வில், எஸ்டிபிஐ கட்சியின் பாம்பன் கிராம பஞ்சாயத்து கமிட்டி தலைவர் நியாஸ் கான், செயலாளர் ஹமீது உசேன், பொருளாளர் ராசிக் பரீத், கமிட்டி உறுப்பினர்கள் ஹாஜி அலி மற்றும் அப்துல்லா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.




