இராமநாதபுரம்
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்

சென்னையில் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு இன்று முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதையடுத்து மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் திருப்புல்லாணி ஒன்றிய மேற்பார்வையாளர் பாத்திமா கனி, பள்ளி தலைமையாசிரியர் ஜவஹர் பாருக் மற்றும் ஆசிரியர்கள் பாட்ஷா, அப்பாஸ் மந்திரி உடனிருந்தனர்.




