இராமநாதபுரம்

ராமநாதபுரம் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு : ஆட்சியர் திடீர் ஆய்வு

ராமநாதபுரம் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு பட்டிணம்காத்தான் இசிஆர் சாலையில் உள்ளது. இராமநாதபுரம் நகராட்சி, சக்கரக்கோட்டை பட்டினம்காத்தான் ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதியிலிருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொட்டப்பட்டுவரும் நிலையில் ஆட்சியர் சிவகுருபிரபாகரன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ராமநாதபுரம் நகராட்சி சக்கரக்கோட்டை பட்டினம்காத்தான் ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதியிலிருந்து நாள் தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளை பட்டினம்காத்தான் இசிஆர் சாலையில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கொட்டப்பட்டு வருகிறது. மலைபோல குவிந்து கிடக்கும் குப்பைகள் தினமும் தீப்பற்றி எரிவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு புகை மண்டலமாக காட்சி அளித்து வரும் நிலையில் அப்பகுதி மக்கள் காய்ச்சல் இருமல் சளி உள்ளிட்ட நோயால் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் ஆட்சியர் சிவகுருபிரபாகரன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.


மலைபோல் குவிந்துள்ள குப்பைகளில் சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தும் வகையில் துர்நாற்றம் வீசிய நிலையில் முகத்தில் மாஸ்கு அணிந்தபடியே ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் இவ்வளவு நாட்கள் என்ன செய்தீர்கள் ஏன் இப்படி கிடக்கிறது இவ்வளவு புகை வெளியேறினால் அருகில் மக்கள் எப்படி வசிப்பார்கள் என அடுக்கடுக்காக கேள்வியை எழுப்பினார் எந்த கேள்விக்கும் அதிகாரிகள் முறையாக பதில் அளிக்காத நிலையில் உடனடியாக அனைத்து அனைத்தையும் சரி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தீயை அணைக்க தீயணைப்பு துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு தீயை அணைக்க உத்தரவிட்டார் நகராட்சி குப்பை கிடங்கில் மின் இணைப்பு தண்ணீர் வசதிகள் சுற்றுச்சுவர் என ஏதும் இல்லாத நிலையில் அனைத்தையும் சரி செய்து முழுமையான செயல்பாட்டிற்கு மூன்று மாதத்திற்குள் முழுமையான செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென உத்தரவிட்டார்

குப்பைகளை சேகரிக்கும் இடத்திலேயே தரம் பிரித்து தனித்தனியாக கொண்டு வந்து கொண்டு கொட்ட வேண்டும். முன்று மாதத்திற்குள்ளே அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய வேண்டும், எதிர்பாராத விதமாக தீ பற்றினால் உடனடியாக அணைக்க போர்வெல் அமைத்து தண்ணீர் மோட்டார் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டார். ஆய்வின்போது இராமநாதபுரம் நகராட்சி அதிகாரிகள், பட்டிணம்காத்தான் சக்கரகோட்டை ஊராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

என்ன இது? ஏன் இந்த அவலம்? அருகில் மக்கள் எப்படி குடியிருக்க முடியும்? இவ்வளவு நாள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன். பதில் அளிக்க முடியாமல் திணறிய அதிகாரிகள்

புகை மண்டலமாக காணும் நகராட்சி குப்பை கிடங்கை கலெக்டர் திடீர் ஆய்வு செய்து உடனடியாக தீயை அடைக்கவும் ஒரு மாதத்திற்குள் அனைத்தையும் சரி செய்ய அதிரடி உத்தரவு

ராமநாதபுரம் நகராட்சி சக்கரக்கோட்டை பட்டினம்காத்தான் ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதியிலிருந்து நாள் தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளை பட்டினம்காத்தான் இசிஆர் சாலையில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கொட்டப்பட்டு வருகிறது. மலைபோல குவிந்து கிடக்கும் குப்பைகள் தினமும் தீப்பற்றி எரிவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு புகை மண்டலமாக காட்சி அளித்து வரும் நிலையில் அப்பகுதி மக்கள் காய்ச்சல் இருமல் சளி உள்ளிட்ட நோயால் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் ஆட்சியர் சிவகுருபிரபாகரன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.


மலைபோல் குவிந்துள்ள குப்பைகளில் சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தும் வகையில் துர்நாற்றம் வீசிய நிலையில் முகத்தில் மாஸ்கு அணிந்தபடியே ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் இவ்வளவு நாட்கள் என்ன செய்தீர்கள் ஏன் இப்படி கிடக்கிறது இவ்வளவு புகை வெளியேறினால் அருகில் மக்கள் எப்படி வசிப்பார்கள் என அடுக்கடுக்காக கேள்வியை எழுப்பினார் எந்த கேள்விக்கும் அதிகாரிகள் முறையாக பதில் அளிக்காத நிலையில் உடனடியாக அனைத்து அனைத்தையும் சரி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தீயை அணைக்க தீயணைப்பு துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு தீயை அணைக்க உத்தரவிட்டார் நகராட்சி குப்பை கிடங்கில் மின் இணைப்பு தண்ணீர் வசதிகள் சுற்றுச்சுவர் என ஏதும் இல்லாத நிலையில் அனைத்தையும் சரி செய்து முழுமையான செயல்பாட்டிற்கு மூன்று மாதத்திற்குள் கொண்டு வர வேண்டுமென உத்தரவிட்டார்

குப்பைகளை சேகரிக்கும் இடத்திலேயே தரம் பிரித்து தனித்தனியாக கொண்டு வந்து கொண்டு கொட்ட வேண்டும். முன்று மாதத்திற்குள்ளே அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய வேண்டும், எதிர்பாராத விதமாக தீ பற்றினால் உடனடியாக அணைக்க போர்வெல் அமைத்து தண்ணீர் மோட்டார் குழாய்கள் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டார். ஆய்வின்போது இராமநாதபுரம் நகராட்சி அதிகாரிகள், பட்டிணம்காத்தான் சக்கரகோட்டை ஊராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button