பரமக்குடி அருகே லாரி -கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் பலி .

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே லாரி -கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் பலி .

மதுரையில் இருந்து வீட்டை காலி செய்து, பொருட்களை ஏற்றி ராமநாதபுரம் நோக்கி வந்த லாரியும் ராமநாதபுரத்திலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் குற்றாலம் நோக்கி சென்ற காரும் அதிகாலை 3 மணியளவில் பரமக்குடி அருகே நென்மேனி இருவழிச் சாலையில் நேருக்கு நேர் மோதியது.
இதில் கார் டிரைவர் மணக்குடி காளீஸ்வரன் 28, ராமநாதபுரம் ஜமுனா 55, ரூபிணி 30 ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானர்.
மேலும் விபத்தில் காயம் அடைந்தவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கோவிந்தராஜ் (65) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.
விபத்து குறித்து பரமக்குடி தாலுகா போலீசார் விசாணை மேற்கொண்டு வருகின்றனர்.





