கீழக்கரை:வேளானூரில் ரேஷன் கடை பிரச்சனையில் சாலை மறியல் முயற்சி

கீழக்கரை:வேளானூரில் ரேஷன் கடை பிரச்சனையில் சாலை மறியல் முயற்சி

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா வேளானூர் கிராமத்தில் நியாயவிலை கடையை அரசு கட்டிடத்தில் அமைத்து தரக்கோரி பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தற்போது அக்கிராமத்தில் நியாயவிலை கடை ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு பாத்தியப்பட்ட சங்க கட்டிடத்தில் இயங்கி வருவதாகவும் அங்கு போதிய இடவசதி இல்லாததால் பொருட்கள் வாங்க வரும் முதியவர்கள், தாய்மார்கள் கடும் வெயிலில் பல மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் மயங்கி விழும் சூழல் ஏற்படுவதாக வேதனை தெரிவித்தனர்.
கிராமத்தில் அனைத்து சமூகத்தினருக்கும் பொதுவான அரசு சமூக கூடம் உள்ள நிலையில், கடையை அங்கு மாற்ற பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என குற்றம்சாட்டுகின்றனர்.
இந்நிலையில், நோற்று சாலை மறியல் செய்ய திரண்ட மக்களிடம் காவல்துறையினர் மற்றும் துறை சார்ந்த அலுவலரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் நியாயவிலை கடை மாற்று இடத்தில் அமைக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது,




