இராமநாதபுரம்

கமுதி சூப்பர்மார்க்கெட் நிறுவனத்துக்கு ரூ.20,000 அபராதம் – நுகர்வோர் மன்றம் அதிரடி உத்தரவு

கமுதி சூப்பர்மார்க்கெட் நிறுவனத்துக்கு ரூ.20,000 அபராதம் – நுகர்வோர் மன்றம் அதிரடி உத்தரவு

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அதிக விலைக்கு காலாவதியான பொருளை விற்ற சூப்பர்மார்க்கெட் நிறுவனத்துக்கு ரூ.20,000 அபராதம் விதித்து இராமநாதபுரம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கின் பின்னணி:
கமுதியைச் சேர்ந்த கோட்டை சுந்தரமூர்த்தி 45, கடந்த ஆண்டு கமுதி குண்டாறு பாலம் அருகே உள்ள சரவணா ஸ்டோரில் குட் ஹோம் நிறுவனத்தின் ரூம் ஃப்ரெஷ்ணர் வாங்கியுள்ளார்.

அந்த நறுமணமூட்டியின் அதிகபட்ச சில்லறை விலை ரூ.75 ஆக இருக்க, கடை நிர்வாகம் ரூ.80 பெற்று ரசீது வழங்கியுள்ளது. மேலும் அது காலாவதியான பொருள் எனவும் தெரியவந்தது.

நுகர்வோர் மன்றம் உத்தரவு:
சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு கோரி சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் மணிவண்ணன், மேலாளர் ராஜாராம் மோகன் ஆகியோர் மீது சுந்தரமூர்த்தி இராமநாதபுரம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த மன்ற தலைவர் பிறவி பெருமாள், உறுப்பினர் குட்வின் சாலமோன்ராஜ் ஆகியோர், நறுமணமூட்டிக்கு வசூலித்த தொகை ரூ.80-ஐ திருப்பி வழங்க வேண்டும், சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு ரூ.10 ஆயிரம், வழக்கு செலவுக்கு ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.20,080 வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button