கமுதியில் பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு

கமுதியில் பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ரஹ்மானியா மெட்ரிக் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியர் இபுராஹிம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துணை தலைமையாசிரியர் செல்வம் மற்றும் நிர்வாக அலுவலர் இர்ஷாத் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கமுதி அன்னை பல் மருத்துவமனை மருத்துவர் கார்த்திகேயன், போதைப்பொருள் பயன்பாட்டால் மாணவர்களின் உடல்நலம், கல்வி மற்றும் எதிர்காலத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கி, போதைப் பழக்கத்திலிருந்து தங்களையும், பிறரையும் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.
தொடர்ந்து, பள்ளி மாணவர்கள் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி செட்டியார்பஜார், முஸ்லிம் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் ஊர்வலமாகச் சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.



