வளைகுடா

துபாயில் இன்று ரத்ததான முகாம்

துபாயில் இன்று ரத்ததான முகாம்

துபாய் :

துபாயில் மனிதநேய சேவையை முன்னிறுத்தி, கிரீன் குளோப் (Green Globe) தன்னார்வக் குழுவின் சார்பில், எமிரேட்ஸ் ஹெல்த் சர்வீசஸ் (Emirates Health Services) ஷார்ஜா ரத்த வங்கி மற்றும் ஆராய்ச்சி மையம், துபாய் காவல்துறை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் ரத்ததான முகாம் இன்று (அக்டோபர் 29) நடைபெறுகிறது.

துபாயில் உள்ள நைப் காவல் நிலையம் அருகில் மாலை 4.30 மணிக்குத் தொடங்கும் இந்த முகாமில், பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று ரத்ததானம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

“ஒரு துளி ரத்தம் பல உயிர்களைக் காப்பாற்றும்” என்ற நோக்கத்தை வலியுறுத்தும் இந்த முயற்சி, ரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு உதவுவதையும், ரத்ததானத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ரத்ததான முகாம் குறித்த தகவல்கள் மற்றும் முன்பதிவுக்கு, பின்வரும் WhatsApp எண்களைத் தொடர்புகொள்ளலாம்:

  • +971 50 216 5838
  • +971 52 190 5223

மனிதநேயத்தைப் போற்றும் இந்த ரத்ததான இயக்கத்தில் பங்கேற்று, உயிர்களைக் காக்கும் உன்னதப் பணியில் பொதுமக்கள் தங்களின் பங்களிப்பை வழங்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button