கட்டுரைகள்

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழில் தங்களது படைப்புகளும் இடம் பெற…!

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழில் தங்களது படைப்புகளும் இடம் பெற…!

கனடாவிலிருந்து ‘தமிழோவியம்’, இலண்டனிலிருந்து ‘நிலாச்சாரல்’ என்று ஒரு சில இணைய இதழ்கள் வெளிநாடுகளிலிருந்து வெளியாகிக் கொண்டிருந்த வேளையில், தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து ஆண்டோ பீட்டர் நடத்திய ‘தமிழ் சினிமா’ இணைய இதழைத் தொடர்ந்து, தேனியிலிருந்து இரண்டாவது இணைய இதழாக, ’முத்துக்கமலம்’ பல்சுவை இணைய இதழ், www.muthukamalam.com எனும் இணைய முகவரியைக் கொண்டு, கடந்த 1-6-2006 ஆம் நாளிலிருந்து இணையத்தில் வலம் வரத் தொடங்கியது. மாதமிருமுறை எனும் கால அளவில் தொடர்ந்து புதுப்பிக்கப் பெற்று வரும் இம்மின்னிதழ் 18 ஆண்டுகளை நிறைவு செய்து, தற்போது 21 ஆம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

புதிய ஊடகமான இணையத்தில், தமிழ் மொழி மற்றும் சமூக வளச்சிக்காக, 21 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் சிறப்புகளாகக் கீழ்க்காணும் தகவல்களைக் குறிப்பிடலாம்.

  • இந்திய அரசின் தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் தகவல் வள நிறுவனத்தால் (அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் குழு) முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழுக்கு 18-6-2015 ஆம் நாள் முதல் பன்னாட்டுத் தரக் குறியீட்டு எண் (ISSN: 2454 – 1990) வழங்கப் பெற்றுள்ளது.
  • இந்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழு, முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழினை சூன்’ 2017 முதல் தமிழ் மொழிக்கான அங்கீகரிக்கப்பட்ட ஆய்விதழ்களில் (இதழ் எண்: 64227) ஒன்றாக அறிவித்தது. ஓராண்டு காலத்திற்கு இந்த அனுமதி அளிக்கப்பட்டிருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
  • முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழுக்கு இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஐக்கிய அரபு நாடுகள், ஐக்கியப்பேரரசு, ஆசுதிரேலியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், கனடா, பிரான்சு, நார்வே, டென்மார்க், தாய்லாந்து, நெதர்லாந்து, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இதழைத் தொடர்ந்து பார்வையிடும் பார்வையாளர்கள் உள்ளனர்.
  • முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழினை நாள்தோறும் எழுநூறு முதல் ஆயிரம் தனித்துவப் பார்வையாளர்கள் (Unique Visitors) பார்வையிட்டு வருகின்றனர். முத்துக்கமலம் மின்னிதழ் பக்கங்களில் நாள்தோறும் சராசரியாக 3536 பக்கங்கள் பார்வையிடப்படுகின்றன.
  • முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழில் அரசியல், திரைப்படம் தவிர்த்து, பல்வேறு தலைப்புகளின் கீழ் மொத்தம் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டப் பக்கங்கள் தமிழில் இடம் பெற்றிருக்கின்றன. முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் தமிழிலக்கியம், தமிழர் பண்பாடு, நாகரிகம் மட்டுமின்றி இணையத்தில் தமிழ் மொழி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றி வருகிறது.
  • முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழில் பல்கலைக்கழகம் / கல்லூரிகளில் பணியாற்றி வரும் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள், தமிழ்த்துறை முனைவர் பட்ட ஆய்வாளர்கள், தமிழ்த்துறை மாணவர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் என்று பலரும் தங்களது படைப்புகளை வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.
  • முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் வலைத்தளம் குறித்து தமிழ் கம்ப்யூட்டர் (மாதமிருமுறை இதழ்), இந்தியா டுடே (தமிழ்ப் பதிப்பு), குங்குமச்சிமிழ் கல்வி – வேலை வழிகாட்டி (மாதமிருமுறை) ஆகிய இதழ்கள் சிறப்புச் செய்திகள் வெளியிட்டிருக்கின்றன. (நகல் இணைப்பு)
  • தமிழ் வலைத்தளங்கள் மற்றும் இணைய இதழ்கள் குறித்து எழுதப் பெற்ற சில நூல்களிலும், பல கட்டுரைகளிலும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் குறித்த செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன.
  • தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள பாட நூல்களில், மேல்நிலை முதலாமாண்டு சிறப்புத் தமிழ்ப் பாடநூலில் ’செயற்களம்’ பிரிவில் ‘4. இணைய ஊடகம் – உருவாக்கமும் பயன்பாடும்’ எனும் தலைப்பிலான பாடத்தில் ’இணைய இதழ்களில் படைப்புகள்’ எனும் தலைப்பின் கீழ் எட்டு இதழ்கள் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. அதில் ‘முத்துக்கமலம்’ இதழ் 6 ஆவது குறிப்பாக இடம் பெற்றிருக்கிறது.
  • தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடநூலில் “பண்பாடு – விருந்து போற்றுதும்” என்ற பாடத்தின் பின்பகுதியில் (69 ஆம் பக்கத்தில்) ‘இணையத்தில் காண்க’ எனும் தலைப்பின் கீழ் முத்துக்கமலம் இணைய இதழில் வெளியான, சிவகாசி, எஸ்.எஃப்.ஆர். மகளிர் கல்லூரி (தன்னாட்சி), தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் மா. பத்மபிரியா அவர்கள் எழுதிய, ‘தமிழர் பண்பாட்டில் விருந்தோம்பல்’ எனும் கட்டுரைக்கான இணையப் பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p113.html என்று கொடுக்கப்பட்டிருக்கிறது.
  • திண்டுக்கல்லைச் சேர்ந்த த. சுதந்திராதேவி என்பவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ‘முத்துக்கமலம் இணைய வழிச் சிறுகதைகள் – மதிப்பீடு’ எனும் தலைப்பிலும், திருச்சிராப்பள்ளி, பிசப் ஹீபர் கல்லூரி மாணவி கீதா என்பவர் ‘முத்துக்கமலம் இணைய இதழ் உள்ளடக்கப் பகுப்பாய்வு’ எனும் தலைப்பிலும் ஆய்வு செய்து ஆய்வியல் நிறைஞர் (M.Phil) பட்டம் பெற்றிருக்கின்றனர்.
  • தேனி மாவட்டம், வடுகபட்டியைச் சேர்ந்த மு. ரேணுகாதேவி (உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, தேனி கலை அறிவியல் கல்லூரி, வீரபாண்டி, தேனி மாவட்டம்) என்பவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு (Ph.D) மேற்கொண்டு வருகிறார்.
  • இணைய இதழ் தொடர்பாக, பல்கலைக்கழகங்களில் செய்யப் பெற்ற ஆய்வியல் நிறைஞர் (M.Phil) மற்றும் முனைவர் (Ph.D) பட்டங்களுக்கான பல்வேறு ஆய்வுகளில், முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் குறித்த தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.
  • முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களுடன் இணைந்து பன்னாட்டுக் கருத்தரங்குகளை நடத்திக் கொண்டிருக்கிறது.
  • முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ், முத்துக்கமலம் வலையொளி (Youtube) ஒன்றையும் செயல்படுத்தி வருகிறது. இவ்வலையொளிப் பதிவில் தமிழ் மொழியிலான பல்வேறு சுவையான தகவல்கள், தமிழ் மொழியிலான தமிழறிஞர்களின் உரைகள், தமிழ்ச் சங்க நிகழ்வுகள் என்று பல நிகழ்படங்கள் (Video) பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. (https://www.youtube.com/@muthukamalam1153)
  • முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் குறித்து நிறைய சிறப்புகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்…

இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் ஆயிரத்துக்கும் அதிகமான படைப்பாளர்களின் கதை, கவிதை, கட்டுரை, ஆன்மிகத் தகவல்கள், பொன்மொழிகள், ஜோதிடத் தகவல்கள், சிரிப்புகள், குறுந்தகவல்கள், சமையல் குறிப்புகள் என்று பல்வேறு தலைப்புகளில் படைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.

உலகம் முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழில் தங்களது படைப்புகளும் இடம் பெற வேண்டுமென்று விரும்புகிறீர்களா…? அப்படியென்றால் கீழ்க்காணும் இணையப் பக்கத்திற்குச் சென்று, அதில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளைப் பின்பற்றித் தங்களது படைப்புகளை அனுப்பலாம்…!

http://www.muthukamalam.com/siteinfo/articles.html

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button