கவிதைகள் (All)

சிறப்புகள் வேண்டே!..

சிறப்புகள் வேண்டே!..
“”**
பணம் அது ஒன்றே பற்றது ஒன்றே கொடுப்பது ஒன்றே கொடையது வேறே
நடப்பது ஒன்றே நலமது ஒன்றே படிப்பது ஒன்றே பயனது வேறே..
காற்றது ஒன்றே கலப்பது ஒன்றே கடலது ஒன்றே கடமைகள் வேறே..
பூவது ஒன்றே புலர்வது ஒன்றே காய்பதும் ஒன்றே கனியது வேறே..
வேரது வேறே வியர்வையும் வேறே செய்கைகள் வேறே செயலது வேறே..
கன்றது வேறே தாயது வேறே பிறப்பது வேறே பெருமைகள் வேறே..!
நிழலது ஒன்றே நிற்பதும் ஒன்றே நடையது ஒன்றே நலம்பெறல் வேறே
கூடது ஒன்றே குடும்பங்கள் ஒன்றே குரல் வர பார்க்க குருவிகள் வேறே..
ஒன்றென ஒன்றே உயர்வுகள் ஒன்றே உயர்வினில் ஆட நினைப்புகள் வேண்டே!..
அறிவெனல் ஒன்றே ஆற்றலும் ஒன்றே அடைவார் பார்த்து கொடுத்தலே நன்று!

பாவலர் மு இராமச்சந்திரன் தலைவர் தமிழர் தன்னுரிமைக் கட்சி.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button