கீழக்கரை போதைக்கு எதிரான விழிப்புணர்வு குழுவிற்கு பாராட்டு

கீழக்கரை போதைக்கு எதிரான விழிப்புணர்வு குழுவிற்கு பாராட்டு

போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு திட்டத்தின் கீழ் 2025 – 2026 ஆண்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மற்றும் ஹமீதியா பெண்கள் பள்ளிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு தனியார் கல்லூரியில் நடைபெற்றது
தமிழ்நாடு அரசு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் Anti Drug Club திட்டத்தின் மூலம், மாணவர்கள் மத்தியில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக இப்பாராட்டு வழங்கப்பட்டது.
மாவட்ட அளவில் நடைபெற்ற மதிப்பீட்டில் கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி NSS குழு மூன்றாம் இடத்தை பெற்று சாதனை படைத்தது.
இந்த பாராட்டுச் சான்றிதழை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவகுரு பிரபாகரன் அவர்கள் ஹமீதியா ஆண்கள் பள்ளி NSS திட்ட அலுவலர் பசீர்
மற்றும் ஹமீதியா பெண்கள் பள்ளி தலைமை ஆசிரியர் அன்வர் நிஷா
ஆகியோருக்கு வழங்கினார்.
இந்த அங்கீகாரம் பள்ளி மாணவர்கள் , மாணவிகள் மற்றும் NSS தன்னார்வலர்களின் சமூக அக்கறை மற்றும் சேவை மனப்பான்மைக்கு கிடைத்த பெரும் ஊக்கமாக அமைந்துள்ளது.




