திருவாடானை அரசு கலைக்கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு

திருவாடானை அரசு கலைக்கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு

மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உறுதிமொழி ஏற்பு போதைப்பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் வகையிலும், இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவாடானை காவல் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது,
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள், NSS ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் திரளாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் போதைப்பழக்கத்தின் தீய விளைவுகளை அறிந்து செயல்படுவது, போதைக்கு ஆளாக மாட்டோம் என உறுதி பூணுவது, போதைக்கு ஆளானவர்களை மீட்டெடுத்து நல்வழிப்படுத்துவது உள்ளிட்ட 5 அம்ச உறுதிமொழியை ஏற்றனர்.
“நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் நல்வாழ்விற்கும் போதைப்பொருள் ஒழிப்பில் நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவோம்” என காவல்துறை சார்பில் வலியுறுத்தப்பட்டது.




