இராமநாதபுரம்

எஸ் டி பி ஐ கட்சி சார்பில் சாலையை சீரமைக்க கோரிக்கை மனு

எஸ் டி பி ஐ கட்சி சார்பில் சாலையை சீரமைக்க கோரிக்கை மனு.

இராமநாதபுரம் மாவட்டம், சிக்கல் ஊராட்சி தொட்டியபட்டி செல்லும் சாலையானது மிக மோசமடைந்த நிலையில் உள்ளது.மக்கள் பயன்படுத்துவதற்கு தகுதியற்ற சாலையாக மாற்றியுள்ளது.
சாலையை சீரமைத்திட வலியுறுத்தி எஸ் டி பி ஐ கட்சி சிக்கல் பஞ்சாயத்து கமிட்டி சார்பில் கடலாடி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடத்தில் சிக்கல் பஞ்சாயத்து கமிட்டி தலைவர் முஹம்மது இல்யாஸ் தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் எஸ் டி பி ஐ கட்சி இராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் காஜா முஹைதீன் , முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி தலைவர் முஹம்மது ரபீக், சிக்கல் பஞ்சாயத்து கமிட்டி செயலாளர் காஜா ஷரீப்,தொட்டியபட்டி ஜமாஅத் தலைவர் சாகுல் ஹமீது உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button