இராமநாதபுரம்

கமுதியில் தடைசெய்யப்பட்ட 334 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் இருவர் கைது

கமுதியில் தடைசெய்யப்பட்ட 334 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் இருவர் கைது ராமநாதபுரம் கமுதியில் தடைசெய்யப்பட்ட 334 கிலோ புகையிலை பொருட்களை சரக்கு வாகனத்தில் எடுத்து சென்ற இருவரை போலீசார் கைதுசெய்தனர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சாயல்குடி சாலையில் அரண்மனைமேடு சுற்றுவட்டசாலையின் அருகே போலீசார் வாகனதணிக்கையில் ஈடுபட்டனர் அப்போது அந்தவழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் தடைசெய்யப்பட்ட 334 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது இதனையடுத்து வாகனத்தில் வந்த புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் மணிகண்டன் (34) சரக்குவாகன ஓட்டுநர் நாகபாண்டி மகன் திருக்கார்த்திக் (29) ஆகிய இருவரையும்போலீசார் கைதுசெய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர் இந்த புகையிலை பொருட்களை கமுதி கடைகளுக்கு சப்பளை செய்ய கொண்டு வந்தார்களா என விசாரித்து வருகின்றனர் உறுதியாகும் பட்சத்தில் கடைகளில் சோதனையிட முடிவுசெய்துள்ளனர் என தெரிகின்றது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button