திருவாடானையில் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள், தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

திருவாடானையில் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள், தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்
SBI வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் – 3 முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தி

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் விவசாயிகள் விரோதக் கொள்கைகளை கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் திருவாடானையில் மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
திருவாடானை பாரத ஸ்டேட் வங்கி முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு,
முத்துராமன்- தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர், சேதுராமன் – விவசாய தொழிலாளர் சங்க தாலுகா செயலாளர்,
நாகூர் பிச்சை- சி.ஐ.டி.யு மாவட்டக்குழு உறுப்பினர் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். அவர்களின் முக்கிய கோரிக்கைகள்:
தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் 44 தொழிலாளர் சட்டங்களை 4 சட்ட தொகுப்புகளாக மாற்றும் முடிவை கைவிட வேண்டும்.பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்,விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதை சட்ட மசோதா மற்றும் மின்சார திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டி கோரிக்கை முன்வைக்கப்பட்டது
இந்த போராட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்க நிர்வாகிகளான செந்தில், அருள்சாமி, பால்ராஜ், முருகன், ஷாஜகான் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகளும், தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.




