இராமநாதபுரம்

ஏர்வாடி காவல் துறை சார்பில் கீழக்கரை பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஏர்வாடி காவல் துறை சார்பில் கீழக்கரை பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டின் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஏர்வாடி காவல் துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு ஏர்வாடி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முனியாண்டி தலைமை தாங்கினார். தலைமை காவலர் விஜயா குமார் உடன் இருந்தார் சார்பு ஆய்வாளர் பேசுகையில் “இளம் வயதில் போதைப்பொருளுக்கு அடிமையாவதால் கல்வி, உடல்நலம் மற்றும் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. மாணவர்கள் விளையாட்டு, படிப்பு மற்றும் நல்ல நட்புகளின் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை தேர்ந்தெடுக்க வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.மேலும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாடு தொடர்பான சட்ட விதிகள், அதனால் ஏற்படும் சமூக பாதிப்புகள் குறித்தும் காவல் துறை அதிகாரிகள் மாணவர்களுக்கு விளக்கினர். சந்தேகத்திற்கிடமான செயல்களை உடனடியாக காவல் துறைக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.
இந்நிகழ்சியில் பள்ளி தலைமையாசிரியர் ஜவஹர் பாரூக், ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button