திருவாடானை அருகே மின்வாரியத்தின் அலட்சியம்

திருவாடானை அருகே மின்வாரியத்தின் அலட்சியம்
மாற்று கம்பம் நட்டும் மின் கம்பிகளை மாற்றாததால் பொதுமக்களுக்கு ஆபத்து!

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை – மங்கள்குடி செல்லும் சாலையில் உள்ள காட்டியநேந்தல் பிரிவு அருகே உள்ள சேதமடைந்த மின்கம்பம் பெரும் ஆபத்தை ஏற்படுத்தி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்த பழைய மின்கம்பத்திற்கு மாற்றாக புதிய மின்கம்பம் நடப்பட்டது. ஆனால் மின்வாரிய அதிகாரிகள் பழைய கம்பத்தில் இருந்த மின் கம்பிகளை புதிய கம்பத்திற்கு மாற்றாமல் அலட்சியமாக உள்ளனர்.
தற்போது பழைய கம்பம் முறிந்து எந்த நேரத்திலும் விழும் அபாய நிலையில் உள்ளது.புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை
இது குறித்து திருவாடானை உதவி மின் பொறியாளர் அலுவலகம் முதல் முதலமைச்சரின் தனிப்பிரிவு வரை பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பழைய கம்பம் முறிந்து விழுந்து விபத்து ஏற்படும் முன்பாக, மின்சாரத் துறை துரிதமாக நடவடிக்கை எடுத்து புதிய மின்கம்பத்திற்கு கம்பிகளை மாற்றி பொதுமக்களின் உயிர் மற்றும் பணத்தை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.



