இராமநாதபுரம்
விழிப்புணர்வு ஊர்வலம்

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா ஆர்.எஸ்.மங்கலத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்கும் நோக்கில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

இந்த ஊர்வலத்திற்கு திருவாடானை டி.எஸ்.பி சீனிவாசன் தலைமை தாங்கினார். ஆய்வாளர் ரபிக் முன்னிலை வகித்தார்.
ஊர்வலத்தில் வின்னர்ஸ் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு, “போதைக்கு எதிராக போராடுவோம்”, “ஆரோக்கியமான இளைஞர்களை உருவாக்குவோம்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்.
பொதுமக்களிடையே போதையின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த ஊர்வலம் அமைந்தது.




