ராமநாதபுரத்தில் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் எல்.ஐ.சி. பங்குகள் விற்பனைக்கு எதிர்ப்பு

ராமநாதபுரத்தில் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் எல்.ஐ.சி. பங்குகள் விற்பனைக்கு எதிர்ப்பு:

எல்.ஐ.சி நிறுவனத்தின் மேலும் 6.5 சதவீத பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ள மத்திய அரசை கண்டித்து, ராமநாதபுரம் எல்.ஐ.சி. கிளை அலுவலகம் முன்பாக அகில இந்திய காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் சார்பில் மதிய உணவு இடைவேளையின் போது கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்ட விவரம்:
இந்த ஆர்பாட்டத்திற்கு எல்.ஐ.சி. கிளை செயலாளர் *வெயிலு முத்து தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் கிளைத்தலைவர் முத்துப்பாண்டி கண்டன உரையாற்றுகையில்,
“எல்.ஐ.சி நிறுவனம் பங்குச்சந்தையில் இருந்து உருவானது அல்ல. இந்திய தேசத்தின் பொதுமக்கள் தந்த சேமிப்பிலும், முகவர்கள், வளர்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் கடின உழைப்பிலும் உருவானது. எனவே, பாலிசிதாரர்களின் சேமிப்பிற்கு பாதுகாப்பு அளிப்பதில்தான் மத்திய அரசு முழு கவனம் செலுத்த வேண்டும்.
ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் நம்பிக்கையைப் பெற்ற மிகப்பெரிய பொதுத்துறை நிதி நிறுவனமான எல்.ஐ.சியின் பங்குகளை அரசு தொடர்ந்து விற்பனை செய்யக் கூடாது” என்று வலியுறுத்தினார்.
முழக்கங்கள்:
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட காப்பீட்டுக் கழக ஊழியர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். கைகளில் சிவப்பு கொடிகள் மற்றும் “காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் – இராமநாதபுரம்” என்ற வாசகம் அடங்கிய பதாகையை ஏந்தியபடி நின்றனர்.
நிகழ்வின் நிறைவில் கிளை பொறுப்பாளர் சுல்தான் பாட்சா நன்றி கூறினார்.




