கெட்டுப்போன மீன் இறைச்சிகள் பறிமுதல்

கெட்டுப்போன மீன் இறைச்சிகள் பறிமுதல்

இராமநாதபுரத்தில் மீன் விற்பனை கடைகளிலிருந்து 30 கிலோ கெட்டுப்போன மீன் இறைச்சிகளை உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால், விசைப் படகுகளில் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், மீனவர்கள் சிறிய படகுகளில் கடலுக்குள் சென்று மீன்களைப் பிடித்து வருகின்றனர்.
இதனால், தற்போது மீன்களுக்கு கடும் பற்றாக்குறை நிலவுகிறது. இதன்காரணமாக வியாபாரிகள் மீன்களை மொத்தமாக வாங்கி குளிர்சாதன பெட்டிகளில் இருப்பு வைத்து விற்பனை செய்யப்படுவதாக உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பட்டணம்காத்தான், ராம்நகர் ஆகிய பகுதிகளில் உள்ள மீன் விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் சோதனையிட்டனர். அப்போது, 30 கிலோ கெட்டுப்போன மீன் இறைச்சிகளை உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
மேலும், தொடர்ந்து இதுபோல கெட்டுப்போன மீன் இறைச்சிகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.




