இராமநாதபுரம்

வீட்டில் பதுக்கி விற்பனை 150 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்தொழிலதிபர் உட்பட 2 பேர் கைது

வீட்டில் பதுக்கி விற்பனை 150 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்
தொழிலதிபர் உட்பட 2 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் வெளிநாட்டு பொருட்களை விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஆராய்சி நகரை சேர்ந்த சுலைமான் மகன் அஸ்யூப் கான் (61) மற்றும் சாயல்குடி வடக்கு தெருவை சேர்ந்த சையபு மகன் பாக்கர் சிங் (47) ஆகியோர் வீட்டில் 150 கிலோ குட்கா புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தனர்.

ரகசிய தகவலின் பேரில் சென்ற போலீசார் சோதனை நடத்தியதில் 15 கிலோ எடை கொண்ட 10 மூட்டைகளில் இருந்த குட்கா பொருட்களை கைப்பற்றினர்.

இதையடுத்து அஸ்யூப் கான் மற்றும் பாக்கர் சிங் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

இந்த சோதனையை இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையில் எஸ்.ஐ பக்கிரிமுத்துகுமார் தலைமையிலான போலீசார் மேற்கொண்டனர். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடந்த 3 மாதங்களில் சாயல்குடியில் 300 கிலோவிற்கும் மேலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button