இராமநாதபுரம்

பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் வடக்கு மாவட்ட 8ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் தேவிபட்டினம் தவ்ஹீத் மர்கஸில் மாவட்டத் தலைவர் ரஹ்மான் அலி தலைமையில் மற்றும் மாவட்டச் செயலாளர் அல்பார் அமீன், மாவட்ட பொருளாளர் ஆதில், மாவட்ட துணைத் தலைவர் அபுதாஹிர், மாவட்டத் துணைச் செயலாளர்கள் யாசர் அரபாத், சல்மான் & ரபீக் மற்றும் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் அப்துல் ஹமீது ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இதில், ஆண்டறிக்கை, சிறந்த செயல்பாடுகளுக்கான பரிசு வழங்குதல், நிர்வாக அறிவிப்புக்கள் மற்றும் இன்னும் பல நிகழ்வுகள் நடைபெற்றது

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொருளாளர் காஞ்சி இப்ராஹிம் மற்றும் மாநிலச் செயலாளர் ஒலி முகம்மது MISC ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்

இப்பொதுக்குழு கூட்டத்தில் கிளை நிர்வாகிகள் மாவட்ட பேச்சாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button