இராமநாதபுரம்
கீழக்கரை புது கிழக்கு தெருவில் PKC சிறுவர்கள் மாபெரும் கபாடி போட்டி ஆரவாரமாக தொடக்கம்

கீழக்கரை புது கிழக்கு தெருவில் PKC சிறுவர்கள் மாபெரும் கபாடி போட்டி ஆரவாரமாக தொடக்கம்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புது கிழக்கு தெரு மக்கள் மற்றும் இளைஞர்கள் பொது நல சங்கம் சார்பில் நடத்தப்படும் “PKC சிறுவர்கள் மாபெரும் கபாடி போட்டி” இன்று ஆரவாரமாக தொடங்கியது.
போட்டியின் தொடக்க விழாவிற்கு புது கிழக்கு தெரு மக்கள் மற்றும் இளைஞர்கள் பொது நல சங்கத்தின் துணைத் தலைவர் அசன்,செயலாளர் ஹபீப் ரஹ்மான், பொருளாளர் முகைதீன் பஃஹத் மற்றும் செயற்குழு உறுப்பினர் பாக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் கலந்து கொண்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட வீரர்களை உற்சாகப்படுத்தி போட்டியை முறைப்படி தொடங்கி வைத்தனர்.
ஏராளமான பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டு போட்டியை கண்டு ரசித்தனர்.மேலும் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது,




