இராமநாதபுரம்

கமுதி பகுதியில் பருவமழையின்றி கருகிய நெற்பயிர்கள் நிவாரணம் வழங்க அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

கமுதி பகுதியில் பருவமழையின்றி கருகிய நெற்பயிர்கள் நிவாரணம் வழங்க அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

ராமநாதபுரம்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா உட்பட்ட கோவிலாங்குளம் ,குண்டுகுளம், வண்ணாங்குளம், கே.வேப்பங்குளம் , சீமானேந்தல், அரிசிகுழுதான்,முதல்நாடு, முஸ்டக்குறிஞ்சி, செந்தனேந்தல், பாப்பாங்குளம், பம்மனேந்தல், சாத்தூர்நாயக்கன்பட்டி, ஆகிய கிராமங்களில் போதிய பருவமழையின்றி நெற்பயிகள் வயல்களில் அறுவடை செய்யமுடியாமல் கருகிபோய்விட்டது இதனால் பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்த விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளார்கள் இதுகுறித்து குண்டுகுளம் விவசாயி காளியம்மாள் வயது (55) கூறுகையில் ஒவ்வொரு ஆண்டும் விவசாயத்திற்காக பல ஏக்கர் அளவில் விவசாயம் செய்து வருகின்றோம் பருவத்தில் பெய்ய வேண்டிய மழையும் பெய்யாதநிலையில் ,கமுதி,கடலாடி, முதுகுளத்தூர் ஆகிய பகுதிகளுக்கு வைகையிலிருந்து வரக்கூடிய தண்ணீர் கிடைக்காத சூழ்நிலையில் தொடர்ந்து பல ஆண்டுகளாக நாங்கள் விவசாயம் செய்தும் அறுவடை செய்ய முடியாமல் வயக்காட்டிலே நெற்பயிர்கள் கருகிப் போய் விடுகிறது அதிகளவில் பணம் செலவழித்தும், களைஎடுத்தல், உரம் இடுதல், பல லட்சம் ரூபாய் செலவு செய்து பயனலிக்கவில்லை இது குறித்து மாவட்ட அதிகாரிகளுக்கும், வேளாண்மை துறை அதிகாரிகளுக்கும் பலமுறை மனு கொடுத்தும் இந்த மூன்று தாலுகாவினுடைய விவசாயினுடைய பிரச்சனையை இதுவரை அரசு செவிசாய்க்கவில்லை இனிவரும் காலங்களில் இது போன்ற நிலை இல்லாமல் இராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி, கடலாடி, முதுகுளத்தூர் தாலுகா விவசாயிகளும் பயன்பெறும் வகையில் வைகையில் இருந்து வரக்கூடிய தண்ணீரை பார்த்திபனூர் மதகுகள் வழியாக திறக்க வேண்டும் எனவும் இந்த ஆண்டு பருவமழையின்றி கருகிப்போன நெற்ப்பயிர்களுக்கு அரசு பேரிடர் கால நிவாரண நிதியாக ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய், பயிர் காப்பீடு இன்சூரன்ஸ் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கின்றோம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button