இராமநாதபுரம்முதுகுளத்தூர்
ஜே.ஆர்.சி. துவக்க விழா

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியில், 2025-2026 ஆம் கல்வி ஆண்டின் ஜே.ஆர்.சி. துவக்க விழாவில், பள்ளி தலைமையாசியர் காஜா நிஜாமுதீன் குரைசி அவர்களின் தலைமையிலும் உதவித் தலைமையாசிரியர்கள் காமிலாபானு, ஜாஹீர் உசேன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக, பள்ளி சாரணர் இயக்க பொறுப்பாசிரியர் அலி அக்பர், தேசிய பசுமைப் படைப் பொறுப்பாசிரியர் நாசர், நாட்டு நலப்பணித்திட்ட பொறுப்பா சிரியர் நூருல் அமீன் ஆகியோர் கலந்து கொண்டு ஜே.ஆர்.சி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர். விழா முடிவில் பள்ளி ஜே.ஆர். சி ஆலோசகர் பரமேஸ்வரன் நன்றி கூறினார்.





