கவிதைகள் (All)

உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்

உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள். 1.5.2025

கதிரவன் நாள் முழுதும் உழைத்து வெப்பமும் ,வெளிச்சமும் தருகிறான். 

மதியும்  குளிர்ச்சியும் ,வெளிச்சமும்  தந்து இரவெல்லாம் உழைக்கிறான்.

விண்மீன்கள் அவனுக்குத் துணையாக உழைத்து

இரவினில் ஒளிர்கின்றன.

கரியமில வாயுவை வாங்கி

ப்ராண வாயுவைக் கொடுத்து 

மரமும் நாளெல்லாம் உழைத்து

சுவாசத்தைக் காக்கிறது.

காற்றும் ஓயாது வீசி ,வெப்பம் தணித்து காசினியைக் காக்கிறது. 

தனது நீரைக் கொடுத்து மழை மேகமாய் மாற்றி 

பூமியில் நீர்வளம் காக்க கடலும் உழைக்கின்றது. 

இரவு , பகல் மாறி மாறி வர 

ஓயாமல் சுழன்று நமது 

பூமிப்பந்தும் உழைக்கின்றது. 

நம்மைச் சுற்றி இயற்கையெல்லாம்

நாளும் உழைக்கையிலே 

நாமும் ஓய்வின்றி உழைப்பதுதான்  

நன்மை தரும் செயலாகும். 

உழைத்துப் பிழைப்பவர்க்கு 

உரிய ஊதியம் கிடைக்கச்செய்வோம் 

உழைத்துப் பிழைப்பவரின்

உரிமைக்குக் குரல் கொடுப்போம். 

உழைத்துப் பிழைப்பவர்க்கு 

உரிய மதிப்பளிப்போம் – பிறர்

உழைப்பைச் சுரண்டிப் பிழைப்போரைப்

புறக்கணிப்போம். 

உழைத்துப் பிழைப்போரை உத்தமர் என்றழைப்போம்.

உழைக்காது பிழைப்போர்க்கு

 உண்மை உணரவைப்போம் வைப்போம். 

உழைப்பு வாழ்க ! உழைப்பாளர் வாழ்க!

உழைப்பாளர் தினம் வாழ்க. !

அன்புடன்,

சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button