கவிதைகள் (All)

குடியரசு தின கவிதை

குடியரசு தின கவிதை


ஆயிரம் விடுமுறை வந்தாலும்
இந்த நாளில் …
எத்தனை ஆனந்தம் நம்முள்…
ஏனென்றால் …
முடியரசுக்கு முற்றுப்புள்ளி வைத்த நாள்..
உதிரம் சிந்தி பெற்ற சுதந்திரத்தை
உயிரோட்டம் பெற செய்த நாள்…
மக்களாட்சிக்கு மகுடம் சூடிய நாள்…
அதுவே வெற்றி முரசு ஒலித்த
அற்புத குடியரசு நாள்…

அடுத்த தலைமுறைக்கு ஆணி வேராய் இருக்கும்
இன்றைய தலைமுறையே…
உன்னிடம் கேட்பதெல்லாம் இது தான்..
மனிதனை மனிதனாக வாழவிடாமல் தடுக்கும்
பிற்போக்கு சிந்தனைகளை விதைக்காமல்…
சமத்துவம், சகோதரத்துவம், சகிப்புத்தன்மை என்னும்
சாகச விதைகளை விதைத்து கொண்டே இரு…
கண்டிப்பாக பின்னாளில் விருட்சம் போல
அது வளர்ந்து நிற்கும்…
வேற்றுமை மறந்து மனிதம் போற்றுவோம் …
இந்தியன் என்று பெருமிதம் கொள்வோம்…


Lt. ஜ. ஹாஜிராம் பீவி,
உதவி பேராசிரியை மற்றும் தேசிய மாணவர் படை அலுவலர்,
கணினி அறிவியல் துறை,
ஜமால் முகமது கல்லூரி,
திருச்சி –  620 020

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button