கவிதைகள் (All)

விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

விக்கினங்கள் போக்கும் நாயகன்,

வினைகள் தீர்க்கும் நாயகன்,

விஜயம் செய்யும் நாயகன்.

விரைந்து அருளும் நாயகன்.

விநோத  உருவ  நாயகன்.

விஸ்வம் காக்கும் நாயகன்.

விந்தைகள் புரியும் நாயகன்.

விகல்பமில்லா நாயகன்.

அவனே நம் விநாயகன்.

பாதம் சரணடைந்தால்

பாதகங்கள் நீக்கி

சாதகங்களாக்கிடும் 

மோதகப்ரியன் விநாயகன். 

தும்பிக்கையானை 

துணையெனக் கொண்டால்

நம்பிக்கை தந்திடும் 

அம்பிகை மைந்தன் விநாயகன். 

வேங்கை மரமாய் நின்று 

வேலவனுக்குதவிய 

வேழமுகத்தோன் 

வேண்டும் வரம் தரும் விநாயகன். 

புலி வாகனனுக்கு சோதரனாகிய

எலிவாகனத்தான் விநாயகன். 

கலி தீர்த்து பக்தரைக் காக்கும் 

கலியுக தெய்வம் விநாயகன்.

கணபதியவனை

மனமதில் வரித்திட

குணபதியாக்குவான்

தனபதியாக்குவான் விநாயகன். 

அன்னை – தந்தையே 

அகிலமென்று காட்ட

அவர்களை வலம் வந்து

அருங்கனி வென்ற விநாயகன். 

மண்ணில் செய்தாலும்

மஞ்சளில் செய்தாலும்

மனமுருகி துதித்தால்

மங்களம் தருவான் விநாயகன். 

சதுர்த்தி நாளில் 

சந்நிதி வந்து 

சரணடைந்தோர்க்கு 

சங்கடம் தீர்க்கும் விநாயகன்.

ஜெய் கணேச பாஹிமாம்.

ஜெய் கணேச ரக்ஷமாம்.

அன்புடன்,

சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம்.

13.09.2026.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button