இராமநாதபுரம்முதுகுளத்தூர்

முதுகுளத்தூர் அருகில் உள்ள ஆப்பனூரில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான தமிழி நடுகல் கண்டுபிடிப்பு!!

முதுகுளத்தூர் அருகில் உள்ள ஆப்பனூரில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான தமிழி நடுகல் கண்டுபிடிப்பு!!

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே ஆப்பனுார் கிராமத்தில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழி (தமிழ் பிராமி) கல்வெட்டை மதுரை தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் தலைமையிலான குழு கண்டறிந்தது இங்குள்ள ஆண்டியேந்தல் பகுதியில் உள்ள அரியநாச்சியம்மன் கோயில் வளாகத்தில் இக்கல்வெட்டு மண்மூடிக் கிடந்தது. 2 ஆண்டுக ளுக்கு முன் கும்பாபிஷேக திருப்பணியின் போது கண்டெடுக்கப்பட்டது. ஆனால் அது கல்வெட்டு என அறியாமல் மரத்தின் கீழ் வைத்திருந்தனர்.
இங்கு சுவாமி கும்பிட வந்த கமுதியை அடுத்த பேரையூரை சேர்ந்த ஆசிரியர் கு.முனியசாமி இக்கல்லை பார்த்து மதுரை பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மைய செயலாளர் சாந்தலிங்கத்திற்கு தகவல் தெரிவித்தார்.
சாந்தலிங்கமும், உதவி ஆய்வாளர் உதயகுமாரும் நேரில் சென்று கல்வெட்டை படிஎடுத்து படித்தனர்.
இக்கல்வெட்டு பண் டைய தமிழ் எழுத்தான தமிழியில் எழுதப்பட்டி ருந்தது. வெங்கச் செங்கல் என்னும் வகையைச் சேர்ந்த கல், புள்ளிகள் எதுவுமின்றி கல்வெட்டாக வெட்டப்பட்டுள்ளது.
ஆபன்னூர் ஏறிய் மாண்டு விழுந்த அத்தியன் கீரன்கல்’ என்பது இக்கல் வெட்டின் வாசகம்.
இதன் பொருள், ஆப்பனுார் மேல் சண்டையிட்டுமாண்டு விழுந்து போனவீரன் அத்தியன் கீரனுக்கு
எடுக்கப்பட்ட நடுகல் என்பதாகும். அத்தியன் என்பது தந்தை பெயராகவும்அவனது மகன் கீரன் என்பது இறந்து போன வீரன்பெயராகவும் உள்ளது.
இராமநாதபுரம் மாவட்டத்திலேயே இதுதான் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நடுகல்வெட்டாகும்.
இதுகுறித்து சாந்தலிங்கம் கூறியதாவது: கல்வெட்டின் காலத்தை அறிய அதில் நிபுணத்துவம் பெற்ற சுப்பராயலு, மார்க்சியகாந்தி, ராஜ கோபால் ஆகியோரிடம் கருத்து கேட்கப்பட்டது. அவர்களும் இக்கல்வெட் டின் உண்மைத் தன்மையையும், காலத்தையும் உறுதி செய்தனர்.
ஆப்பனுார் என்ற பெயரே 2000 ஆண்டுகளுக்கு முன்பே வழக்கத்தில் இருந்துள்ளது பெருமைக்குரிய செய்தியாகும்,

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button