இராமநாதபுரம்

கீழக்கரை நகர் நலன் கோரி தமிழக முதல்வர், அமைச்சர்களுக்கு மனு: மக்கள் நல பாதுகாப்பு கழகம், சமூக செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பு நடவடிக்கை!!

கீழக்கரை நகர் நலன் கோரி தமிழக முதல்வர், அமைச்சர்களுக்கு மனு: மக்கள் நல பாதுகாப்பு கழகம், சமூக செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பு நடவடிக்கை!!

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பொதுமக்கள் மற்றும் நகர் நலன் சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வர்,துறை சார் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு மக்கள் நல பாதுகாப்பு கழகம்,கீழக்கரை சமூக செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பு சார்பாக கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். கீழக்கரை அரசு மருத்துவமனை புதிய கட்டிடத்தை உடனடியாக கட்ட வேண்டும்,கீழக்கரை அரசு மருத்துவமனையில் செயல் படும் இரத்த பரிசோதனை நிலையம் தாமதமாக திறப்பதால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றார்கள் இதை கருத்தில் கொண்டு குறித்த நேரத்தில் திறக்க வேண்டும்,கீழக்கரையின் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு போக்குவரத்து காவல் நிலையம் அமைக்க வேண்டும்,தற்போது நகரில் நிலவும் போதை பொருள் நடமாட்டம் குறிப்பாக கள்ளதனமான விற்கப்படும் மது விற்பனையை தனிப்படை அமைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும்,கீழக்கரை மட்டும் சுற்றுவட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும்,கீழக்கரை நகராட்சி பகுதிகளில் சிதிலமடைந்து காணப்படும் வாறுகால்களை சீரமைப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும்,கீழக்கரை பகுதிகளில் சீரான மின்சாரம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், நீண்ட நாட்களாக கட்டப்படாமல் இருக்கும் மீன் அங்காடியை உடனடியாக கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button