இராமநாதபுரம்முதுகுளத்தூர்
79 ஆவது சுதந்திர தினம்

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாத், ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கம் சார்பாக ஜமாத் தலைவர் ஹாஜி.காதர் மொய்தீன் அவர்களால் சங்கத்தின் கட்டிடத்தில் 79 ஆவது சுதந்திர தினத்திற்கான இந்திய ஜனநாயக நாட்டின் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்பித்தார்கள், இந்நிகழ்வில் சங்க நிர்வாகிகள், ஜமாத் நிர்வாகிகள், பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி கல்விக் குழு நிர்வாகிகள், பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள், மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து சிறப்பித்தார்கள். சங்கத்தின் செயலாளர் அகமது கபீர் அவர்கள் விழாவை ஒருங்கிணைக்க, துணைத் தலைவர் மீரா அவர்கள் வரவேற்புரை ஆற்ற, சங்க தலைவர் அப்துல் அஜீஸ் அவர்களின் நன்றி உரை உடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.






