இராமநாதபுரம்
கீழக்கரையில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நடைபெறும் மாநாட்டிற்கு அழைப்பு

கீழக்கரையில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நடைபெறும் மாநாட்டிற்கு அழைப்பு

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு ஜமாஅத் ஜும்மா பெரிய பள்ளிவாசலில் இன்று 04.07.2025 தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர்,மற்றும்
தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினரும், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர், மனிதநேய மக்கள் கட்சியின் பொது செயலாளர் ப_அப்துல்சமது_MLA அவர்கள் ஜும்மா உரை நிகழ்த்தினார்.
மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஜுலை06 ஆம் தேதி மதுரையில் நடைபெறும் இரட்டை கோரிக்கை மாநாட்டிற்கான அழைப்பிதழை ஜமாத் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்தனர்.
உடன் தமுமுக துணை பொது செயலாளர் எஸ்.சலிமுல்லாகான், அமைப்பு செயலாளர் புழல் ஷேக் முகமது அலி, பொதுக்குழு உறுப்பினர் கீழை பாதுஷா, முஜிபுர் ரஹ்மான்,வர்த்தக அணி மாநில துணை செயலாளர் பனைக்குளம் பரக்கத்துல்லா உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தார்கள்.




