இராமநாதபுரம் மத்திய மாவட்ட தமுமுக நிர்வாக குழு கூட்டம்: போதை ஒழிப்பு, உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றம்

இராமநாதபுரம் மத்திய மாவட்ட தமுமுக நிர்வாக குழு கூட்டம்: போதை ஒழிப்பு, உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றம்

இராமநாதபுரம் மத்திய மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாக குழு கூட்டம் நேற்று 01/08/2026 அன்று மாலை 5.00 மணியளவில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பிரிமியர் இபுராஹிம் அவர்கள் தலைமை தாங்கினார். தமுமுக மாநில துணை பொது செயலாளர் எஸ்.சலிமுல்லாஹ்கான் அவர்கள் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:
போதை ஒழிப்பு: போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களை ஜாதி, மதம், அரசியல் செல்வாக்கு பார்காமல் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். வருங்கால தமிழ் சமூகத்தின் வளர்ச்சியை தடுக்கும் போதை வியாபாரிகளை இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை தொடர்ந்து கைது செய்து வரும் நடவடிக்கையை மாவட்ட செயற்குழு வரவேற்கிறது.
ராமேஸ்வரம், மண்டபம், உச்சப்புளி, இராமநாதபுரம், கீழக்கரை ஆகிய முக்கிய இடங்களில் போதை விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
- அமைப்பு பணிகள்:கிளை வாரியாக உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது மற்றும் கிளை வாரியாக தேர்தல் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
- மாநாடு மற்றும் சேவை: சென்னையில் நடைபெற உள்ள அரசமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்யவும், இராமநாதபுரம் மற்றும் மண்டபம் ஆம்புலன்ஸ் விபரங்கள் சரிபார்க்கப்பட்டது.
- திறன் மேம்பாடு: மஸ்ஜித் தக்வா வளாகத்தில் முகவை திறன் மேம்பாட்டு பயிலகத்தை தொடங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட துணை நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




