இராமநாதபுரம்

விளையாட்டு விழா கொண்டாட்டம்

விளையாட்டு விழா கொண்டாட்டம்

கண்ணாடி வாப்பா சர்வதேசப்பள்ளியின் 12 வது விளையாட்டு விழாவானது 24.12.25 புதன்கிழமை வெகுசிறப்பாக நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக சேது பாஸ்கரா கல்வி நிலையத்தின் நிறுவனர் முனவர் சேது குமணன் பங்கேற்றார் . பள்ளியின் நிறுவனர் செய்யது முகமது ஜலாஹூதீன் முன்னிலை வகுத்தார் .பள்ளியின் அறங்காவலர்களான டாக்டர் சதக்கத்துல்லா முனைவர் டாக்டர் முகமது அப்துல் காதர் உடன்
பள்ளி முதல்வர் பிரமோதா மேனன் தலைமை தாங்கினர் .வண்ணத்துப்பூச்சியின் சிறகைப் போல இளந்தளிர்களின் வரவேற்பு நடனம் , நமது பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் சீறும் சிலம்பாட்டம் ,கரகாட்டம் என வியத்தகு ஆற்றலை மாணவர்கள் வெளிப்படுத்தினர் . விழா நிகழ்வினை பள்ளி நிர்வாக அலுவலர் முகமது அன்சார் ஒருங்கிணைத்தார்.

விழாவில் முதுகுளத்தூர்.காம் ஆசிரியர் முதுவை ஹிதாயத், டிஜிட்டல் பொருளாதார ஆலோசகர் பக்ருதீன் அலி அஹமது உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button