அரசுப் பணி பெற வழிகாட்டும் கேரள எம்.எல்.ஏ. தமிழகத்தில் நடக்குமா ?

ஒரு M.L.A. நினைத்ததால் தோன்றிய மிகப்பெரிய சமுதாய நலன் !

இதுபோன்று, தமிழ்நாட்டுக்கு வாய்த்த 234ல் ஒரு MLA அமைந்தால் கூட குறைந்தது 6 மாவட்டங்கள் பயனுறாதா என்ன ?
நஜீப் காந்தபுரம் எம். எல். ஏ….
கேரள மாநிலத்தில், பெருந்தல்மண்ண தொகுதியில் போட்டியிட்ட போது அளித்த தேர்தல் வாக்குறுதியை இன்று நிறைவேற்றிய பூரண திருப்தியுடன் உள்ளார்.
இந்தியாவின் நூறு சதவீதம் இலவசமாக சிவில் சர்வீஸ் தேர்வுக்கு பயிற்சியளிக்கும் முதல் அகாடமி இன்று திறந்து வைக்கப்பட்டது .
மலபார் பிரதேசத்தின் முதல் சிவில் சர்வீஸ் அகாடமியும் கூட.
மறைந்த முஸ்லிம் லீக் தலைவர்
ஹைதரலி ஷிஹாப் தங்கள் பெயரில் சிவில் சர்வீஸ் அகாடமி துவங்குவதற்கு நஜீப் காந்தபுரம் எம்எல்ஏ திட்டமிட்ட போதே பல்வேறு தரப்பினரும் உதவ முன்வந்தனர்.
இந்த மகத்தான அறப்பணிக்காக ஒரு குடும்பம் 70சென்ட் நிலத்தை இலவசமாக வழங்கிய நிலையில்,
அமீரகத்தின் பைசல் & சபானா பவுண்டேசன் நிறுவனம் மூன்று கோடி ரூபாய் செலவில் கட்டுமானப்பணி முழுவதும் இலவசமாக செய்து உதவினர்.
குளிரூட்டப்பட்ட வகுப்பறைகள், உலகத்தரம் வாய்ந்த நூலகம், மீடியா ரூம், விடுதி அறைகள், 24மணி நேர இணைய வசதி உட்பட சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராக தேவையான அனைத்தும் ஒரே வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
மலபார் பிரதேசத்தின் ஆறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பயன்பெறும் வகையிலும்,
வருடத்திற்கு நூறு பேருக்கு சிவில் சர்வீஸ் தேர்வுக்கு பயிற்சியளிக்கும் வகையில் இந்த அகாடமி உள்ளது.
இந்தாண்டுக்கான மாணவர்கள் 3600பேர் விண்ணப்பித்ததில் , சிபாரிசுகள் தவிர்த்து முற்றிலும் தகுதியான நூறு பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் இன்று முதல் பயிற்சியை மேற்கொள்ளவுள்ளனர்.
இந்த அகாடமி குறித்து
நஜீப் காந்தபுரம் எம்எல்ஏ கூறுகையில் :-
ஆண்டுக்கு நூறு மாணவர்களுக்கு பயிற்சியளித்து அவர்களை சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக ஒவ்வொரு மாணவருக்கும் சுமார் மூன்று லட்சம் ரூபாய் செலவாகும், சமூகத்தின் அடுத்த தலைமுறை நன்மை கருதி அதை முற்றிலும் இலவசமாக வழங்க அகாடமி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
நூறு பேரும் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறமுடியாவிட்டாலும் பத்து பேராவது உயர் பதவிகளுக்கு தேர்வாகும் நிலையில் மீதமுள்ள 90பேருக்கு தன்னம்பிக்கை ஏற்பட்டு வேறு துறைகளில் தேர்வெழுத தூண்டுகோலாக இந்த அகாடமி அமையும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்…
தேசத்துக்கும் சமூகத்துக்கும் பயனுள்ள உயர் அதிகாரிகள் இந்த அகாடமி மூலம் உருவாகிட இறைவன் அருள் புரிவானாக.
மேற்சொன்ன செய்தியில் மிகவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது மூன்று விஷயங்கள் :-
- அதிகாரத்தில் இருக்கும் ஒருவரின் சீரிய சிந்தனை
- 70 சென்ட் நிலத்தினை தானமாக சமூகநலனில் அக்கறை கொண்டு அர்பணித்த அந்தக் குடும்பம்.
- அமீரகத்தின் பைசல் & சபானா பவுண்டேசன் நிறுவனத்தின் நன்கொடை.
நன்றி : Colachel Azheem அண்ணன்.
பகிர்வு : கொடிநகரான்.


