புது கிழக்குத் தெரு மக்கள் மற்றும் இளைஞர்கள் சங்க மாதாந்திர கூட்டம் நடைபெற்றது

புது கிழக்குத் தெரு மக்கள் மற்றும் இளைஞர்கள் சங்க மாதாந்திர கூட்டம் நடைபெற்றது

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புது கிழக்குத் தெரு மக்கள் மற்றும் இளைஞர்கள் சங்கத்தின் மாதாந்திர கூட்டம், சங்கத் தலைவர் அகமது கான் அவர்கள் தலைமையில் இன்று மாலை 5 மணியளவில் தொடங்கியது.
இக்கூட்டத்தில் சங்கச் செயலாளர் ஹபிபுர் ரஹ்மான் காகா, பொருளாளர் முகைதீன் பகத் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் முக்கியமாக கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
-உறுப்பினர் சேர்க்கை: சங்கத்தில் அதிகமான புதிய உறுப்பினர்களை இணைப்பது மாத சந்தா உறுப்பினர்களிடமிருந்து மாத சந்தாவை முறையாகப் பெறுவது
-விழிப்புணர்வு பிரச்சாரம்: வரும் 16ஆம் தேதி தெரு மக்களை நேரில் சந்தித்து, தெருவிற்கான அடிப்படை பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது
கூட்டத்தில் உறுப்பினர்கள் தெருவின் வளர்ச்சி மற்றும் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு கருத்துகளையும் பகிர்ந்து கொண்டனர்.




