இராமநாதபுரம்
விபத்து ஏற்படும் அபாயம்

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் வட்டாரத்தில் சுழற்சி முறையில் இரவு பகலாக விவசாயிகள் கூடுதல் பணம் செலவு செய்து மோட்டார் வைத்து தண்ணீர் பாய்ச்சுகின்றனர். அப்போது ரோட்டை கடந்து செல்வதற்காக குழாய் அமைக்கப்படுகிறது. இரவு நேரத்தில் குழாய் இருப்பது தெரியாமல் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

இதனால் விவசாயிகள் இரவு நேரத்தில் தேவையான பாதுகாப்புடன் தண்ணீர் பாய்ச்ச வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கூறினர்.



