வளைகுடா

அல் அய்னில் இந்திய சுதந்திர தினம் உற்சாக கொண்டாட்டம்

அல் அய்னில் இந்திய சுதந்திர தினம் உற்சாக கொண்டாட்டம்

அல் அய்ன் :

அல் அய்ன் இந்திய சமூக மையத்தின் சார்பில் இந்தியாவின் 80 வது சுந்தந்திர தினம் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

இந்திய சமூக மைய தலைவர் மது ஓமனக்குட்டன் தலைமை வகித்தார். பொது செயலாளர் முபாரக் முஸ்தபா வரப்பரப்புரை நிகழ்த்தினார்.

இந்திய தூதரக அதிகாரி ரோஹித் மிஸ்ரா இந்திய தேசிய கோடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

பொருளாளர் முஸ்தபா வட்டபறம்பில் வாழ்த்துரை வழங்கினார்.

இந்திய பள்ளிக்கூட மாணவிகளின் கண்கவர் காலை நிகழ்ச்சிகள் நடந்தது.

துணை பொது செயலாளர் ஹாரிஸ் நன்றியுரை நிகழ்த்தினார்.

இந்த விழாவில் இந்திய சமூக மைய நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button